மண்மேடு சரிவினால் மலைநாட்டு தொடருந்து சேவை பாதிப்பு!

மண்மேடு சரிவினால் மலைநாட்டு தொடருந்து சேவை பாதிப்பு!

ஹாலி எல – தெமோதர தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் மலைநாட்டு தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பதுளையிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று தடைப்பட்டுள்ளது.

மண் மற்றும் கல்லை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெமோதரை தொடருந்து நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.