
ராகம தொடருந்து நிலையத்துக்கு அருகில் இரு தொடருந்துகள் மோதி விபத்து
ராகம மற்றும் பேரலந்த தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று (01) காலை இரண்டு தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ராகம தொடருந்து நிலைய பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தை, அதன் பின்னால் வந்த மற்றுமொரு தொடருந்து எஞ்சின் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதுவொரு பாரிய விபத்து அல்லவென தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.