ஜனாதிபதி ஐக்கிய இராச்சியம் நோக்கி பயணமானார்!

ஜனாதிபதி ஐக்கிய இராச்சியம் நோக்கி பயணமானார்!

ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் (Glasgow) இடம்பெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(30) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு, நாளை முதல் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை க்ளாஸ்கோவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.