சீனாவில் அதி உயர் கட்டடங்களை நிர்மாணிக்க தடை!

சீனாவில் அதி உயர் கட்டடங்களை நிர்மாணிக்க தடை!

அதி உயர் கட்டட நிர்மாணிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 3 மில்லியனுக்கும் குறைந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில், 150 மீட்டர் உயரமான கட்டடங்களைக் கட்டுவதற்கு சீனா தடை விதித்துள்ளது.

ஷாங்காய் மற்றும் ஷென்சேன் மாகாணங்களில் உயர்ந்தளவிலான கட்டிடங்களுக்குத் தேவையுள்ள போதிலும், நிலப்பரப்பு கூடிய ஏனைய மாகாணங்களுக்கு உயர்ந்தளவான கட்டடங்களுக்கான அவசியம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக செலவீனத்தை தவிர்க்கவும், குறைந்த செலவில் கவர்ச்சிகரமான கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் இதன்மூலம் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமற்ற கட்டட நிர்மாணங்களுக்கு சீனா இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது