ஆப்கானில் உள்ள அமெரிக்க பிரஜைகளை மீட்க நடவடிக்கை

ஆப்கானில் உள்ள அமெரிக்க பிரஜைகளை மீட்க நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள எஞ்சிய தமது நாட்டு பிரஜைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலைக்கொண்டிருந்த அமெரிக்க துருப்பினர் கடந்த ஒகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் வெளியேறிந்தனர்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானை முழுமையாக தாலிபான்கள் கைப்பற்றியிருந்த நிலையில், அங்கு இடைக்கால அரசாங்கத்தையும் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ளவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

439 அமெரிக்கர்கள் இவ்வாறு ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள நிலையில், அவர்களில் 363 பேருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 176 பேர் மட்டுமே அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களை எதிர்வரும் இரண்டு வாரங்களில் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.