ஹக்மன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு: 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்

ஹக்மன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு: 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்

ஹக்மன- கோங்கால பொலிஸ் காவலரன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 36 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு பொலிஸார், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

கோங்கால பொலிஸ் காவலரன் பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை ட்ரக் வண்டியொன்று மோதிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.