சூடானில் மக்கள் சார்ந்த ஜனநாயக ஆட்சிக்கு அமெரிக்கா ஆதரவு

சூடானில் மக்கள் சார்ந்த ஜனநாயக ஆட்சிக்கு அமெரிக்கா ஆதரவு

சூடானில் மக்கள் சார்ந்த ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சூடானுக்கான அமெரிக்க விசேட தூதுவர் ஜெஃப்ரி ஃபெல்ட்மென் இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அவர் சூடானின் பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சூடானில் இடம்பெற்ற எழுச்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை அமுல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சூடானில் சிவில் சமூகத்தினரும், இராணுவத்தினரும் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், சூடானில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில், சிவில் சமூகத்தினர் இராணுவ ஆட்சியைக் குற்றம் சுமத்தி ஆட்சியைக் கலைப்பதற்கு எதிர்பார்க்கின்றனர்.

நேற்றைய தினம் ஆயிரங்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, அதில் சிவில் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.