81 வயதில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த வயோதிபப் பெண்
இஸ்ரேலை சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் இணையவழி வகுப்புகள் மூலம் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முழுமையாக நிறைவுசெய்து இளங் கலைமாணி பட்டத்தை பூர்த்திசெய்துள்ளார்.rn
ஜிஹாத் பூட்டோ என்ற இப்பெண், சிறு வயதிலிருந்தே கல்வி மீது ஆர்வம் கொண்டவராகக் காணப்பட்டுள்ளார்.
எனினும், 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் நடைபெற்ற போர் காரணமாக, 12 வயதின் பின்னர் அவரால் படிப்பைத் தொடர முடியாமல் போயுள்ளது.
நாட்டின் நிலைமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக அவரின் படிப்பு நிறுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வியை தொடர முடியாமல்போன ஏக்கம் காரணமாக தமது 81 ஆவது வயதில் படிப்பைத் தொடர அவர் தீர்மானித்தார்.
அதற்கமைய, இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இணைந்து அவர் படிப்பை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக இணையவழி வகுப்புகள் மூலம் கல்லூரி படிப்பை முழுமையாக நிறைவு செய்த அவர், இளங்கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுமார் 73 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தனது பட்டப் படிப்பை நிறைவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.