ரிவி தெரணவின் புதிய முயற்சியான 'மத்து தெரண

ரிவி தெரணவின் புதிய முயற்சியான 'மத்து தெரண

ரிவி தெரணவின் புதிய முயற்சியான ´மத்து தெரண´ திட்டம் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் ´மத்து தெரண´ உடன் 18 வயதுற்குட்பட்டவர்களுக்கு இணைந்து கொள்ள முடியும்.
இதில் அவர்களுக்கு அறிவு, நிதி வாய்ப்பு மற்றும் மேலும் பல உதவிகள் வழங்கப்படவுள்ளன.

தமது திறமைகள் அடங்கிய விண்ணப்பப்படிவம் ஒன்றை mathuderana@derana.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியதன் பின்னர் நிபுணர் குழுவினால் ´மத்து தெரண´ திறமையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்து தெரண´ குறித்து கருத்துத் தெரிவித்த, தெரண ஊடக வலையமைப்பின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லக்சிறி விக்ரமகே, மத்து தெரண என்பது விளையாட்டாக இருக்கலாம், அறிவியலாக இருக்கலாம், புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம், அவ்வாறான பிரிவுகளின் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவளித்து உலகத் தரத்திற்கு கொண்டுச் செல்லக்கூடிய விடயங்களைத் தேடி அவர்களை அங்கு அனுப்புவதுதான் இதன் நோக்கமாகும். என்றார்.

இந்நாட்டு தொலைக்காட்சி வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய கலைத்துறையின் முன்னோடியான ரிவி தெரண இன்று தனது 16 ஆம் ஆண்டு விழாமை கொண்டாடும் அதேநேரத்தில் ´மத்து தெரண´ திட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.