பிரான்சில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய அகதிகள் 3 பேர் தொடருந்தில் சிக்கி பலி

பிரான்சில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய அகதிகள் 3 பேர் தொடருந்தில் சிக்கி பலி

பிரான்சில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய அகதிகள் 3 பேர், தொடருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு அகதி கால் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ். இந்த நகரம் பிரான்சுக்குவரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்துவரும் அகதிகள் இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.

அந்த வகையில் 11ஆம் திகதி இரவு பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள தொடருந்து தண்டவாளத்தில் படுத்துறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்றுமுன்தினம் அதிகாலை 6 மணிக்கு இந்தத் தண்டவாளத்தில் தொடருந்து வந்துள்ளது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் தொடருந்தில் சிக்குண்டு பலியாகியுள்ளனர். 

இந்த கோரச் சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு அகதிக்கு கால் உடைந்த நிலையில் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.