உலக சந்தையில் பால்மாவின் விலை 7 வருடங்களின் பின்னர் பாாியளவில் அதிகாிப்பு
சர்வதேச ரீதியில் உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் மீண்டும் உலக சந்தையில் பால்மாவின் விலை பாாியளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பால்மா உற்பத்தி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் நியூசிலாந்தில் உற்பத்திகளில் வீழ்ச்சி ஏற்பட்டமையே இந்த விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாகும்.
இதன் காரணமாக, அமெரிக்க சந்தையில் பால்மா உள்ளிட்ட பால் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்தது.
பால் மற்றும் பிற உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் பால்மா எளிதாக ஏற்றுமதி செய்யக்கூடிய பால் உற்பத்தியாகக் கருதப்படுகின்றது.