வாட்ஸ்ஆப்பில் விடியோக்களை அனுப்புவதில் புதிய அம்சம்!
வாட்ஸ்ஆப் வாயிலாக விடியோக்களை அனுப்பும் திறனை தெரிவுசெய்துகொள்ளும் வகையிலான புதிய அம்சத்தை விரைவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் மூலம் மற்ற பயனர்களுக்கு அல்லது குழுவிற்கு விடியோக்களை அனுப்பும்போது செலவிடப்படும் டேட்டாவின் அளவி வெகுவாகக் குறையும் என்று வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
விடியோக்களை அதிக திறன் அல்லது குறைந்த திறன் அடிப்படையில் அனுப்பும் அம்சம் முதலில் டபில்யூ.ஏ.பீட்டா இன்போ நிறுவனத்தால் கண்டறியப்பட்டது.
விடியோக்களை இதன் அடிப்படையில் அனுப்புவதன் மூலம் டேட்டா அலைவரிசை அல்லது விடியோக்களை சுருக்கி அனுப்பும் அளவு குறையும் என்று எக்ஸ்டிஏ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரவு சேமிப்பான் (data saver) அம்சத்தை பயன்படுத்தி விடியோக்களை குறைந்த திறனில் சுருக்கி அனுப்புவதால் குறைந்த அளவிலான டேட்டா மட்டுமே பயன்படுத்தப்படும்.
வாட்ஸ்ஆப்பில் தனிநபர் அல்லது குழு அழைப்புகளுக்கு ஏற்கெனவே தரவு சேமிப்பான் என்ற அம்சம் பயன்பாட்டில் உள்ளது. அதே போன்று விடியோக்களை அனுப்புவதற்கும் தற்போது தரவு சேமிப்பான் அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் மார்க் ஸூக்கர்பெர்க் டபில்யூ.ஏ.பீட்டா இன்போ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.