திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் உள்ள மகா சேல் கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து பல லட்சம் பெருமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்துள்ளதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கொள்ளை பொருட்களை கொண்டு சென்ற முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பல மாதங்களாக குறித்த கடையில் களவு நடைபெற்று வந்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து ஒன்றறை இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பற்றதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
களவாடப்பட்ட பொருட்களை கொடுத்து போதைபொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.