சந்திரனில் முதன்முதலாக தரையிறங்கியது லூனா-2 விண்கலம் (செப்.14, 1959)

சந்திரனில் முதன்முதலாக தரையிறங்கியது லூனா-2 விண்கலம் (செப்.14, 1959)

லூனா என்பது 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். மனிதனால் அமைக்கப்பட்ட லூனா 2 விண்கலம் கடந்த 1959-ஆம் ஆண்டு இதே தேதியில் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்பிறகு சந்திரனுக்கு பதினைந்து லூனாக்கள்

லூனா என்பது 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். மனிதனால் அமைக்கப்பட்ட லூனா 2 விண்கலம் கடந்த 1959-ஆம் ஆண்டு இதே தேதியில் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்பிறகு சந்திரனுக்கு பதினைந்து லூனாக்கள் அனுப்பப்பட்டன. அவை அனைத்தும் வெற்றிகரமானவையாகும். இவை அனைத்தும் சந்திரனைச் சுற்றவும், தரையிறங்கவும் அனுப்பப்பட்டவை ஆகும்.  இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

 


• 1954 - சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

• 1982 - லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

• 2005 - நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.