தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன.

தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை, நாளை மறுதினம் மற்றும் 1, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளிலும் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

சுகாதார சேவைகள் அதிகாரிகள் நாளைய தினம் வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.

இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில்  வாக்களிக்க முடியுமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.