ஜப்பான், யுனிசெப் இலங்கைக்கு பாராட்டு!
இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மிகவும் விரைவாகவும், வெற்றிகரமாகவும் , இடம்பெற்று வருவதாக ஜப்பான் மற்றும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளன.
கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் யூனிசெப் மற்றும் ஜப்பான் தூதரகம் என்பன இணைந்து, இலங்கையின் சுகாதார சேவைக்கு பல உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் சந்தர்ப்பத்திலேயே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
ஜப்பான் அரசாங்கம் கடந்த ஆண்டில் மட்டும் 16.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சுகாதாரத் துறைக்காக செலவிட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இலங்கையின் சுகாதார சேவைக்கு முடிந்தளவு உயரிய பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவதாகவும் ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் சுகாதார சேவையை கட்டியெழுப்புவதற்காக ஜப்பான் அரசு நீண்டகாலமாக ஆதரவளித்து வருகின்றது.
தற்போதைய கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அந்த ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.