நில நடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை

நில நடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை

மொனராகலை தனமல்வில பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தள்ளார்.

மொனராகலை, வெல்லவாய ,தனமல்வில ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 9.20 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவீட்டில் 2.0 மெக்னிடியூட் அளவில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த பகுதிகளில் இவ்வாறான நிலநடுக்கம் ஒருவருடத்திற்குப் பின்னர் பதிவாகியுள்ளது.