பொருளாதார மத்திய நிலையங்கள் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படுகின்றன

பொருளாதார மத்திய நிலையங்கள் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படுகின்றன

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம்திகதிகளில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொவிட் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கால் பொருளாதார மத்திய நிலையங்களில் பெருமளவான மரக்கறிகள் தேங்கியிருந்தன.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்றும், இன்றும் விசேட பொருளாதா மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.