12 வயது மாணவி கொரோனாவுக்கு பலி

12 வயது மாணவி கொரோனாவுக்கு பலி

நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுவந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அபிமானி நவேத்யா சேரசுந்தர எனும் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ராஜகிரிய பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் சுகயீனம் காரணமாக கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.12 வயது மாணவி கொரோனாவுக்கு பலி