இந்தியாவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவை விட அதிகமாகும் – ட்ரம்ப்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவை விட அதிகமாகும் – ட்ரம்ப்

இந்தியா அதிகளவான கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இதுவரை 2 கோடி கொரோனா பரிசோதனைகளை செய்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், இதனோடு ஒப்பிட்டால்  ஜெர்மனி 40 இலட்சம் சோதனைகளையும், தென்கொரியா 30 இலட்சம் சோதனைகளை  செய்திருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகமாகும் என்றும் இந்தியா,  சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் அங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியா இதுவரை சுமார் 40 இலட்சம் கொரோனா பரிசோதனைகளை செய்திருப்பதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.