இந்திய எல்லையில் ஊடுருவ 300 தீவிரவாதிகள் திட்டம் – இராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
இந்திய எல்லையில் ஊடுருவுவதற்காக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதற்கமைய தக்க சமயம் பார்த்து ஊடுருவதற்காக ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட 250 அல்லது 300 தீவிரவாதிகள் காத்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி வரலாம் என்று எல்லை பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இராணுவ மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், நேற்று இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகவும் தீவிரவாதிகளிடமிருந்து பல இலட்சம் ரூபாய் மதிப்புடைய இந்திய பாகிஸ்தான் பணம் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.