உலர்ந்த மஞ்சள் தொகையுடன் மூன்று பேர் கைது

உலர்ந்த மஞ்சள் தொகையுடன் மூன்று பேர் கைது

கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் , சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் இப்பந்தீவு பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சள் மூடைகளையும் பறிமுதல் செய்தனர்.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி இயந்திரப் படகு ஒன்றை கடற்படையினர் பரிசோதனை செய்தனர். இதன்போது அந்த படகில் 21 உரமூடைகளில் மறைத்து வைக்கப்பட்ட 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிங்கி இயந்திர படகு மற்றும் 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சின்னப்பாடு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த 17ஆம்´ திகதி கற்பிட்டி கிளித் தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் , சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.