நேற்று கொவிட் தடுப்பூசி பெற்றோர் எண்ணிக்கை விபரம்

நேற்று கொவிட் தடுப்பூசி பெற்றோர் எண்ணிக்கை விபரம்

நாட்டில் நேற்று 213, 737 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சைனோபாம் முதலாம் தடுப்பூசி 27, 371 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 107, 930 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி 2,519 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 511 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

மொடெர்னா முதலாம் தடுப்பூசி 480 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 71, 314 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

1, 392 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 2, 205 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.