பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா
பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக வைத்தியருக்கு கொவிட் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக குறித்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அவர் தற்போது வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் இத்தினங்களில் தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இடம் தினமும் தொற்று நீக்கம் செய்யப்படுவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வருவோர் எவ்வித அச்சமும் இன்றி வர முடியும் என பொது சுகாதார பரிசோதகர் சுமித் மார்க் டி சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.