கர்ப்பப்பையில் வளராமல் அடிவயிற்றில் வளர்ந்த குழந்தை: எத்தனை கிலோ எடையில் பிறந்தது தெரியுமா?
டெல்லியில் கர்ப்பிணி ஒருவரின் கர்ப்பப்பையில் சிசு வளராமல் அடிவயிற்றில் வளர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கர்ப்பிணி ஒருவரின் அடிவயிற்றுப் பகுதியில் (Abodominal Cavity) மிகவும் அரிதாக கரு வளர்ந்துள்ளது.
கொதுவாக நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் சுவருடன் ஒட்டியிருக்கும். அடிவயிற்றில் கரு வளர்ந்ததால் நஞ்சுக்கொடி குடல் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தது.
குழந்தை முழு வளர்ச்சியடைந்ததால் 7 மாதத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ள நிலையில், குறித்த குழந்தையின் எடை 2.65 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.
மேலும் தாய் மற்றும் குழந்தை இருவரும் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.