கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் மேலும் 5 பேருக்கு இன்று கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கும் , குவைட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 2 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் ஆயிரத்து 980 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் 468 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் இறுதியாக அடையாளம் காணப்பட்ட மூன்று பேரில் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் சேவைபுரிந்த ராஜாங்கனையை சேர்ந்த நபர் மற்றும் அவரின் மூத்த பிள்ளையுடன் தொடர்பை பேணிய 300 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 229 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து விசேட விமானத்தின் ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் அவர்கள் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் தொழில் மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.