ஆணுக்கு புடவை, பெண்ணுக்கு வேட்டி அணிவித்து வினோத முறையில் நடைபெற்ற திருமணம்
ஆந்திர மாநிலத்தில் நேர் மாறாக ஆணுக்கு சேலையும், பெண்ணுக்கு வேட்டி கட்டி வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கன்னமணி வம்சத்தை சேர்ந்த மக்கள் சிலர் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இவர்களின் வழக்கப்படி திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அதில் ஆண் பட்டுப்புடவை, தங்க நகைகள் அணிந்தும், பெண் வேட்டி சட்டை மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்தும் வித்தியாசமான முறையில் திருமணம் நடைபெற்றது.
இது அவர்களின் பாரம்பரிய வழக்கம் என்று கூறப்படுகிறது. ராணி ருத்ரமாதேவியின் காலகட்டத்தில் அவரை தாக்க வந்த பகையாளிகளை சமாளிக்க நாட்டில் உள்ள பெண்களுக்கு ஆண்கள் வேடம் அணிவித்து எதிரிகளை வீழ்த்தியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுக்குள் ஒரு ஆண் மகன் உள்ளார் என்பது ருத்ரமாதேவியின் தீவிர நம்பிக்கை ஆகும். இதனால் இவரை நினைவு கூறும் வகையில் இப்படி ஒரு திருமண சடங்கை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சடங்கை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.