செல்ஃபி ஆசையால் கூவம் ஆற்றில் தவறிவிழுந்த இளைஞர்- விசாரணையில் வெளியான தகவல்!

செல்ஃபி ஆசையால் கூவம் ஆற்றில் தவறிவிழுந்த இளைஞர்- விசாரணையில் வெளியான தகவல்!

சென்னையில், உள்ள நேப்பியர் பாலத்தில் கீழ் செல்பி எடுக்க சென்ற இளைஞர் தவறி விழுந்து, 8 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, நேப்பியர் பாலத்தில் இரவு 10 மணியளவில் 30 வயதுடைய நபர் ஒருவர், செல்ஃபி மோகத்தால் கூவம் ஆற்றி தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து, இரவு முழுவதும் சிக்கிய அவரை காலை 6 மணியளவில், பொதுமக்கள் தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அண்ணாசதுக்கம் காவல்துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டுள்ளனர்.

மேலும், விசாரணையில் அந்த நபர் பெரியமேட்டைச் சேர்ந்த கார்த்தி (30) என்பது தெரியவந்தது.

இவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அதிகாலை பொழுது அழகாக தெரிந்ததால் செல்பி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது தவறி பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விழுந்ததும் தெரியவந்தது.

பின்பு முதலுதவி அளிக்கப்பட்டு நலமுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.