60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை!

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை!

தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டு, இதுவரையில் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையிலும், கம்பஹா பொது மருத்துவமனையிலும், களுத்துறை - நாகொடை பொது மருத்துவமனையிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.