இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள்!

இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள்! - இராணுவ தளபதி விசேட அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமெனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.