சிறுவர்கள் அடங்கிய ஆபாச காட்சிகளை இணையத்தில் பதிவேற்றிய மேலும் 10 பேர் அடையாளம்!

சிறுவர்கள் அடங்கிய ஆபாச காட்சிகளை இணையத்தில் பதிவேற்றிய மேலும் 10 பேர் அடையாளம்!

சிறுவர்கள் அடங்கிய ஆபாச காட்சிகளை இணையத்தில் பதிவேற்றிய மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு சிறுவர்கள் அடங்கிய ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைதான 25 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இணையத்தளத்தில் சிறுவர் தொடர்பில் ஆபாச காட்சிகளை பதிவேற்றும் நபர்களை கண்டறிவதற்காக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரிவினரால் கடந்த ஜூன் 17 ஆம் திகதி முதல் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றியவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.