கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியோர் 3 - 5 நாட்களுக்குள் பரிசோதனை செய்துகொள்ளவும்

கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியோர் 3 - 5 நாட்களுக்குள் பரிசோதனை செய்துகொள்ளவும்

கொவிட் தொற்றாளர் ஒருவருடன் தொடர்பை பேணியிருந்தால் 3 - 5 நாட்களுக்குள் கொவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு நிறுவகம் பரிந்துரைத்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொவிட் தொற்றாளர் ஒருவருடன் தொடர்பை பேணியிருந்தால் 5 - 7 நாட்களுக்குள் கொவிட் பரிசோதனை செய்து கொள்ளும் வழக்கமே காணப்பட்டது.

எனினும், உலகம் முழுவதும் கொவிட் பரவல் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக 3 - 5 நாட்களுக்குள் கொவிட் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.