இன்று 1,820 பேருக்கு கொவிட் உறுதி!

இன்று 1,820 பேருக்கு கொவிட் உறுதி!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,820  பேர் இன்று (07) அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 326, 043 ஆக அதிகரித்துள்ளது.