நடுரோட்டில் மருமகனை செருப்பால் அடித்த மாமியார்- வைரலான வீடியோவால் ஏற்பட்ட பரபரப்பு!
நடுரோட்டுல் மருமகனை மாமியார் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் கோட்வாலி பகுதியில் உள்ள அனங்க்பெட்டா கிராமத்தின் மஜ்ரா பண்டித்பூர்வா பகுதியைச் சேர்ந்தவர் சந்த் பாபு.
இவருக்கும் ஹரியவானில் உள்ள பீலமஹுவா கிராமத்தில் வசிக்கும் ஹினா பானோவுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக சந்த் பாபு, தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது மனைவி ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதைத்தொடர்ந்து, அந்த பெண் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க சந்த் பாபு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரது மாமியாரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எனது மகளையா அடிக்கிறாய் எனக் கோபத்தில் தனது செருப்பைக் கழற்றி, சந்த் பாபுவை அவர் அடித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தை அங்கு வந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சந்த் பாபு, மாமியார் தாக்கியது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.