வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்ணுக்கு கொவிட் (படங்கள்)
பாணந்துறை, வேகட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் அவ்வீட்டினுள்ளேயே மர்மமாக முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இப்பெண், தனது வீட்டினுள் கதிரையொன்றில் விழுந்துகிடப்பதைக் கண்ட அயலவர் ஒருவர் காவல்துறைக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து சடலத்தை கைப்பற்றி பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்தவர் 85 வயதான பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.
வயோதிபப் பெண், ஓய்வுபெற்ற ஆசிரியர்களான தம்பதியினருடன் நீண்டகாலமாக வசித்து வந்துள்ளதாக என்றும் தெரியவந்துள்ளது.
மேற்படி வயோதிபப் பெண் கடந்த மூன்று நாட்களாக குறித்த வீட்டினுள் தனிமையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரிடம் எமது செய்திப்பிரிவினர் வினவியபோது, உயிரிழந்த பெண்ணுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சரீரம் பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளுக்கமைய, அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவிததார்.