சுடுகாட்டில் சடலங்களுக்கு நடந்த திருமணம்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! இறுதியில் நடந்தது என்ன?
காதல் ஜோடி தனது காதலை குடும்பத்தினர் எதிர்த்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இறுதியில் சுடுகாட்டில் வைத்து சடலத்திற்கு உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தின் வேட் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 1ம் தேதி சுடுகாட்டில் உள்ள மரம் ஒன்றின் கிளையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் காதல் ஜோடி என்பதும் பக்கத்தில் இருக்கும் பலாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
முகேஷ் சோனவானே(22), நேஹா தாக்கரே(19) இருவரும் ஒரே ஜாதி மட்டுமின்றி ஒரே பிரிவினையும் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களின் காதலுக்கு வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரணம் இவர்களின் ஜாதி வழக்கத்தின்படி உட்பிரிவில் திருமணம் செய்வது கிடையாததால் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் பக்கத்து கிராமத்திற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் முகேஷ் "குட் பை" என்று தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்.
பின்பு பொலிசார் இரு குடும்பத்தினருக்கு தெரியபடுத்தி, சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.
இதனையடுத்து இரு வீட்டாரும் பேசி, தற்கொலை செய்து கொண்ட தங்களது பிள்ளைகளின் ஆசையை சாவுக்கு பிறகாவது நிறைவேற்றி விடலாம் என்று முடிவு செய்தனர்.
அதன்படி, மயானத்தில் காதல் ஜோடிக்கு திருமண சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, உறவினர்கள் முன்பு திருமணம் முடிந்துள்ளது.
பின்பு அனைத்து சடங்குகளையும் முடித்த பின்பு இரண்டு பேரையும் ஒரே குழியில் வைத்து புதைத்துள்ளனர். சுடுகாட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.