4 பேர் குளவி கொட்டுக்கு இலக்கு

4 பேர் குளவி கொட்டுக்கு இலக்கு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வனராஜா சமர்வில் கீழ் பிரிவில் நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் இன்று (04) காலை 09.30 மணியளவில் மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது .

தோட்ட வெளிகள உத்தியோகஸ்தர் உள்ளிட்ட இரண்டு ஆண்களும், இரண்டு பெண் தொழிலாளர்களுமாக நால்வரே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய வெளிகள உத்தியோகஸ்தர் உட்பட இரு ஆண்களும் டிக்கோயா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய இரண்டு பெண்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.