2021 திருமதி உலக அழகிப் போட்டி இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது!

2021 திருமதி உலக அழகிப் போட்டி இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது!

இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2021 திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020 நவம்பரில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது, குறித்த போட்டியை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2021 திருமதி அழகிப் போட்டி எதிர்வரும் 2022 ஜனவரி 15 ஆம்திகதி லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

May be an image of 1 person, sitting, standing and text that says 'WESTGATE WESTGATE 2 MRS* WORLD MRS. WORLD 2020 Kate Schneider MaWorld JANUARY 15, 2022 WESTGATE LAS VEGAS RESORT www.MRSWORLD.com'