வீட்டுப் பணிகளில் சிறுவர்கள் - பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

வீட்டுப் பணிகளில் சிறுவர்கள் - பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள் மற்றும் வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)