வனவிலங்குகளால் இடம்பெறும் பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறையில் திருத்தம்!

வனவிலங்குகளால் இடம்பெறும் பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறையில் திருத்தம்!

காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் இடம்பெறும் பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வனவிலங்குளான யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருதுகள் மற்றும் முதலைகள் என்பவற்றின் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் நபர்களுக்கும் முழுமையான அல்லது பகுதியளவில் அங்கவீனமுறும் நபர்களுக்கும் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழப்புக்காக இதுவரை செலுத்தப்பட்ட 5 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகையை பாலின மற்றும் வயது வேறுபாடின்றி 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளது.

பகுதியளவில் அங்கவீனமுறும் அல்லது உடல் உபாதைகளுக்கு உள்ளாகுபவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த 75 ஆயிரம் ரூபா தொகையை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காட்டு யானை தாக்குதலால் ஏற்படும் வீடு மற்றும் சொத்து சேதங்களுக்கு இதுவரையில் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.

இந்த தொகையை 2 இலட்சம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.