இராணுவ பொறியியலாளர்களின் மத்திய கல்லூரி திட்டம் நிறைவு

இராணுவ பொறியியலாளர்களின் மத்திய கல்லூரி திட்டம் நிறைவு

ஜனாதிபதி உத்தரவின் பேரில் இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் பிரிகேட்டினால் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தில் வெலிமடை மத்திய கல்லூரியின் முழுமையான உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் ரோஹான் அமரசேகர ஆகியோரின் அறிவுறுத்தலின் படி இந்த திட்டத்தின் ஆரம்ப பணிகள் 2020 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த தேசிய திட்டமானது ஜனாதிபதியின் சில மாதத்திற்கு முன்னரான பதுளை மாவட்டத்தின் விஜயத்தின் பயனாக கிராம, விளையாட்டு மற்றும் பாடசாலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

புதிய விளையாட்டு அரங்கு, விளையாட்டு மைதானத்தைச் சுற்றிய வடிகால் அமைப்பு மற்றும் பாடசாலை வளாகத்திற்குள் உள்ள மாணவர் விடுதிகளை சீரமைப்பதற்காக இராஜாங்க அமைச்சு 27 மில்லியன் ரூபாயினை ஒதுக்கியுள்ளது.

இலங்கை இராணுவ பொறியியலாளர் பிரிகேட்டின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தரவின் அறிவுறுத்தலின் பேரில் பொது பொறியியல் பிரிகேட்டின் 12 (தொ) பொறியாளர் சேவை படை மற்றும் தள பொறியியல் பிரிகேட்டின் 6 வது கள இலங்கை பொறியியல் படையினர் தற்போது இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.