நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் தம்மை உள்வாங்குமாறு மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் வலியுறுத்து!

நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் தம்மை உள்வாங்குமாறு மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் வலியுறுத்து!

நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் தம்மை உடனடியாக உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும், ஆசிரியர் உதவியாளர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

இதன்போது, மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் மனுவொன்றினையும் அவர்கள் கையளித்திருந்தனர்.

2015ஆம் ஆண்டு மே மாதம் தமக்கு நியமனம் வழங்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் கலாசாலையின் ஊடாக சேவைக்கான பயிற்சியினை தாம் நிறைவு செய்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும், பயிற்சியை நிறைவு செய்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் தம்மை நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கவில்லை என ஆசியர்கள் உதவியாளர்கள் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் மாத்திரம் 270 ஆசிரியர் உதவியாளர்கள் உள்ள நிலையில், மாதாந்த வேதனமாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதானது தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு போதமானதாக இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.