அஸ்ட்ராசெனெகா 2ஆம் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

அஸ்ட்ராசெனெகா 2ஆம் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

 

மேல் மாகாணத்தில் நாளை (01) 39 இடங்களில் அஸ்ட்ராசெனெகா 2ஆம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 13 வைத்தியசாலைகளிலும், 18 பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களிலும், 8 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும் அஸ்ட்ராசெனெகா 2ஆம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் களுத்துறையில் 5 பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களிலும், கம்பஹாவில் 15 பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களிலும் அஸ்ட்ராசெனெகா 2ஆம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.