நாட்டில் தற்போது எந்தவொரு பகுதியும் தனிமைப்படுத்தலின் கீழ் இல்லை - இராணுவ தளபதி

நாட்டில் தற்போது எந்தவொரு பகுதியும் தனிமைப்படுத்தலின் கீழ் இல்லை - இராணுவ தளபதி

இலங்கையில் தற்போது எந்தவொரு பகுதியும் தனிமைப்படுத்தலின் கீழ் இல்லை என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திரசில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்து யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு கிராமசேவகர் பிரிவு நேற்று விடுவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது பெயரில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.