திங்கள் முதல் ஆசிரியர்களும் சமுகமளிக்க வேண்டுமா?

திங்கள் முதல் ஆசிரியர்களும் சமுகமளிக்க வேண்டுமா?

அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச நிறுவனங்கள் நாளை மறுதினம் முதல் வழமைப்போன்று இயங்கவுள்ளன.

எனினும் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

அவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டால் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.