தமிழகத்தில் நாளை தளர்வுகள் இன்றிய ஊரடங்கு!
தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகளற்ற ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பின் படி நாளை வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருள் சேவைகளுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பால் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றிய ஊரடங்கு நடவடிக்கைள் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையல் கடந்த சில நாட்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சிறிய வழிப்பாட்டு தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவுக்கு வழமைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.