கொழும்பில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்!
மேல் மாகாணத்தில் நோய் அறிகுறிகளுடன் கூடிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
பயணத்தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் காரணமாகவே இந்த அதிகரிப்பு இடம்பெற்றிருக்கக் கூடும்.
மக்கள் அடிப்படை கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றப்படாதவிடத்து, நோயாளர் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது.
தற்போது மேல் மாகாணத்தில் அறிகுறிகளுடன் கூடிய நோயாளர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.