ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

அங்குள்ள எமது செய்தித்தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நீதவானின் பிரசன்னத்துடன், ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழாம் முன்னிலையில் இந்த பணிகள் இடம்பெறுகின்றன.

தோண்டி எடுக்கப்படும் சரீரம், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த ஹிஷாலினி கடந்த 3 ஆம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


 

லைப்ஸ்டைல் செய்திகள்