பொலிஸார் இன்று முதல் ஆரம்பிக்க உள்ள விஷேட விசாரணை
சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வௌியிடுவது தொடர்பில் இன்று (29) முதல் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் இதுபோன்ற 18,000 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாருளும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சி ஊடாக ஔிபரப்பப்படும் அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியின் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.