ஹிஷாலினி மரணம் தொடர்பில் இன்றும் விசாரணை முன்னெடுப்பு!

ஹிஷாலினி மரணம் தொடர்பில் இன்றும் விசாரணை முன்னெடுப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பில், ஆராயும் காவல்துறை குழு இன்றைய தினமும் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

கொழும்பில் இருந்து சென்றுள்ள குறித்த காவல்துறை குழு நேற்றைய தினம் முதல் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இதன்படி, சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடத்தில் நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், சிறுமியினை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிக்கு அமர்த்திய நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தரகரின் இல்லத்தில் சென்று இன்று (28) விசாரணை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த சிறுமி ஹிஷாலினியின் சரீரம் புதைக்கப்பட்டுள்ள டயகம தோட்ட பொதுமயானத்திற்கு காவல்துறையினரால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கமைய அவரது சரீரம் எதிர்வரும் நாட்களில் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.